Tuesday, June 7, 2011

கற்பித்தல் முறைகள்


தற்போதைய நவீன கல்விக் கொள்கைகளினதும் அதன் செயற்திட்டங்களினதும் முன்னெடுப்புக்கு நன்கு பயிற்றப்பட்ட ஆசிரியர்களே தேவைப்படுகின்றனர். இன்றேல்இ கல்வியின் பிரதான எதிர்பார்ப்புக்களான அறிவு திறன் மற்றும் மனப்பாங்கு விருத்தி என்பவற்றினை மானவர்களிடத்தில் ஏற்படுத்த முடியாதுபோகும்.
ஆசிரியர்கள் தொழில் ரீதியான அறிவை எப்பொழுதும் விருத்தி செய்பவர்களாகத் திகழ வேண்டும். கிளிப்பிள்ளை போன்று ஒப்புவித்தல் முறையின் மூலம் இந்த நவீன கலைத் திட்டத்தை மாணவர்களிடத்தில் சமர்ப்பிக்க முடியாது. வகுப்பறைக் கற்பித்தலின்போது ஆசிரியர் மையக் கற்பித்தல் முறை மாற்றப்பட வேண்டுமெனும் கருத்து நவீன கல்வியிலாளர்களிடத்தில் தற்போது மேலிட்டுள்ளது. மாணவர் மையக் கல்வி முறைமையே வெற்றிகரமானது என கற்பித்தல் குறித்த கள ஆய்வூகள் தெரிவிக்கின்றன.
நவீன கற்பித்தல் முறைமைகளும் இன்றைய ஆசிரியர்களும்!கற்பித்தல் முறைகள் குறித்து ஓர் ஆசிரியர் அறிந்திருப்பது இன்றைய காலத்தின் தேவையாகும். கற்பித்தலின் தரத்தை மேம்படுத்தல்இ கற்பித்தலின் விளைவாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வினைத்திறன் மிக்க கற்பித்தலை வகுப்பறையில் முன்னெடுத்தல் போன்றவற்றுக்கு நவீன வகுப்பறைக் கற்பித்தல் முறைமைகள் குறித்த அறிவூ மிகவூம் இன்றியமையாதது.
அதேபோன்றுஇ மறுபுறத்தில் ஒரு ஆசிரியர் இந்த கற்பித்தல் குறித்த அறிவினை விருத்தி செய்து கொள்ளாமல் தொடர்ந்தும் வகுப்பறைக் கற்பித்தலில் ஈடுபடுவது மாணவர்களிடத்தில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாணவர்களின் பாடசாலை இடைவிலகலை துரிதப்படுத்தும் ஒரு காரணியாகவூம் இந்த வினைத்திறனற்ற வகுப்பறைக் கற்பித்தல் காணப்படுவதாக மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. திறமையற்ற மாணவர்களின் வகுப்பேற்றத்துக்கும் இத்தகைய கற்பித்தல் குறித்த தௌpவூ இல்லாத ஆசிரியர்கள் வழியமைக்கிறார்கள். அத்துடன்இ மாணவர்களின் பெறுபேறுகளின் வீழ்ச்சி நிலைக்கும் இத்தகைய ஆசிரியர்களே பெறுமளவில் பொறுப்புச் சொல்ல வேண்டும்.
கற்றல் கற்பித்தல் நுட்ப முறைகள்
ஆசிரியர் தொழில் மகத்தானது. சீரிய சமூக உருவாக்கத்தின் அச்சாணியாக இச்சேவை காணப்படுகிறது என்பது மாத்திரமன்றி அனைத்துத் துறைகளுக்குமான மூல வழிகாட்டியாகவூம் இந்தத் தொழிலே விளங்குகின்றது. இந்தத் தொழிலை எந்தளவூக்கு வினைத்திறனுள்ள முறையில் ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பதில் தான் அந்த சேவையின் புனிதத் தன்மை தங்கியூள்ளது.
வகுப்பறையில் ஆசிரியரின் பிரதான பங்கு கற்பித்தலாகும். இதன்சிறப்பான செயற்பாட்டில் தான் பாடசாலையின் முன்னேற்றம் தங்கியூள்ளது. வகுப்பறையில் எப்படிவேண்டுமானாலும் கற்பிக்கலாம் எனும் நிலைமை தற்பொழுது ஓரளவூக்கு மாறியூள்ளது. ஒரு பாடத்தை எந்த வழிமுறையில் முன்வைத்தால் அதன் உச்சப்பயன்பாட்டைப் பெறலாம் என்பதை ஒவ்வொரு ஆசிரியரும் திட்டமிட வேண்டியூள்ளனர். இந்த கற்பித்தல் முறைமைகள் குறித்த ஆரம்ப கட்ட திட்டமிடலுக்குத் தேவையான சில கற்பித்தல் அமைப்புக்களை இங்கே விளங்கிக் கொள்வோம். கற்பித்தலின் பரிணாமம்!ஆரம்பத்தில் ஒரு தலைமுறையினர் தாம் பெற்ற அறிவையூம் அனுபவங்களையூம் ஆற்றல்களையூம் அடுத்த தலைமுறையினருக்கு கையளிக்கும் செயற்பாடே கற்றல் கற்பித்தல் செயன்முறையாக விளங்கியது. இந்த முறை தான் இன்றுள்ள பாரிய கற்றல் கற்பித்தல் நுட்ப முறைமைகளின் வளர்ச்சிக்கு வித்தாகியது எனலாம்.
மனிதன் முதன் முதலாக கையாண்ட கற்பித்தல் முறை பின்பற்றிச் செய்தல் முறை என கல்வியியலாளர்கள் அனுமானிக்கின்றனா;. குடும்பத்தில் உள்ள தாய்இ தந்தை அல்லது வயதில் மூத்தவர்களில் யாரேனும் ஒருவர் ஏதாவதொரு விடயமொன்றினைச் செய்வதைக் கண்ட பிள்ளைகள் அவற்றைப் பின்பற்றிச் செயலாற்றி இருக்கக் கூடும் என கல்வியியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்வாறாக தந்தையூடன் வேட்டைக்குச் சென்ற சிறுவன் பின்னர் சிறந்ததொரு வேட்டைக்காரனாக மாறியிருப்பான். தந்தையை விட நுட்பங்களை இவன் பயன்படுத்தியிருப்பான். இவ்வாறாக அன்றிருந்த பழைய முறைகள் காலப்போக்கில் ஏற்பட்ட சனத்தொகை அதிகரிப்புஇ அறிவூ விருத்தி மற்றும் நுண்ணறிவூ விருத்தி போன்ற காரணங்களினால் புதிய கற்றல் கற்பித்தல் முறைகளாக பரிணமித்தன.பண்டைய பாரம்பரியங்களுடன் கூடிய பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த மக்கள் குரு குலத்திலேயே தமது கல்வியை ஆரம்பித்தனா;. மாணவர்களை தம்மைச் சுற்றி அமரச்செய்யூம் குரு தாம் கற்றவற்றை தமது மாணவர்களுக்கு கற்பித்தார். எழுத்துக் கலையின்; விருத்தியூடன் குரு தாம் கற்றவற்றை ஏடுகளில் எழுத முற்பட்டார். பின்னர் அவ்வேடுகளை வாசித்து விளக்கினார்.காலவோட்டத்தில் கற்போரின் தொகை அதிகரிப்பிற்கு ஏற்பஇ அதனை ஈடுசெய்யூம் வகையில் கற்பித்தல் நுட்ப முறைகளின் தேவையூம் அதிகரித்தது. இதனை ஈடுசெய்யூம் பொருட்டு விரிவூரை முறை கையாளப்பட்டது. பின்னர் கல்வி விருத்திஇ உளவியல் சார்பான கொள்கைகளின் வளர்ச்சிஇ கல்வி நுட்ப முறைகள் மற்றும் கல்வி தொடர்பான ஜனநாயக முறையிலான எண்ணக்கருக்கள் போன்ற காரணிகளின் தாக்கத்தினால் பல கற்றல் கற்பித்தல் நுட்ப முறைகள் உருவாகின.
கற்பித்தல் நுட்ப முறைகளை பின்வருமாறு சுருக்கமாக பாகுபடுத்தலாம்.

01. தனியாள் கற்பித்தல் முறைகள்
1. விரிவூரை முறை
2. வினவூதல் முறை
3. கலந்துரையாடல் முறை
4. செய்து காட்டல் முறை
5. கூறுதல் முறை
6. சிந்தனையைக் கிளரும் முறை
7. நாடகமாக நடித்தல் முறை
8. நுண்முறைக் கற்பித்தல் முறை
9. பூங்கா முறை
10. மொன்ரிசூரி முறை
11. விளையாட்டு முறை
12. டோல்ட்ரன் திட்டம்
(02) குழுவாகக் கற்பிக்கும் முறை
1.அணிமுறைக் கற்பித்தல்
(03) தனியாள் கற்கும் முறைகள்
1. படிமுறைத் திட்டமிட்ட கற்கும் முறை
2. கண்டுபிடித்துக் கற்கும் முறை
3. பிரச்சினைத் தீர்த்தல் முறை
4. போல அமைத்துக் கற்கும் முறை
(04) கூட்டாகக் கற்கும் முறைகள்
1. குழுவாகக் கற்கும் முறை
2. பிரச்சினை தீர்த்தல் முறை
3. செயற்திட்ட முறை
4. கண்டுபிடித்துக் கற்கும் முறை
மேற்படி கற்கும் முறைகளுள் கண்டுபிடித்துக் கற்கும் முறை பிரச்சினை தீர்த்தல் முறைஇ செயற்திட்ட முறை மற்றும் போல அமைத்துக் கற்கும் முறை போன்றன தனியாகவூம் குழுவாகவூம் கற்கும் முறைகளாகும்.
வகுப்பறைக் கற்பித்தலில் புதிய முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்!
பாடத்தின் தன்மை மற்றும் மாணவர்களின் தரம் என்பவற்றிற்கேற்ப கற்பித்தல் முறைகளும் மாற்றமடையூம். விஞ்ஞான கூடத்தில் பரிசோதனையின் மூலம் கற்பிக்கப்பட வேண்டிய விடயத்தினை விரிவூரை முறையைப் பயன்படுத்திக் கற்பிக்க முடியாது. வகுப்பறைக் கற்பித்தலை ஆரம்பிக்கும் முன்னர் ஒர் ஆசிரியர் கட்டாயம் குறித்த பாடத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுதல் வேண்டும்.
அந்தத் திட்டமிடலின் ஆரம்ப கட்டப் பணி கற்பித்தல் வழிமுறையைத் தெரிவூ செய்வதாகும். இந்த கற்பித்தல் நுட்பங்களின் அறிமுகம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்தே இங்கு நான் குறிப்பிட முனைந்துள்ளேன். பெரும்பாலான ஆசிரியர்கள் கற்பித்தலை திட்டமிடும்போது தமது இலகு கருதியே கற்பித்தல் முறையைத் தெரிவூ செய்கின்றனர். பாடத்தின் தன்மைஇ பாடவேளைஇ பௌதீக வளங்கள்இ மாணவர்களின் தன்மை என்பவற்றைப் பற்றி கற்பித்தல் முறையைத் தெரிவூ செய்யூம் ஆசிரியர்கள் கருத்தில் கொள்வது குறைவூ.
தேசிய ரீதியில் கல்வி முன்னேற்றத்தை எட்டுவதற்காக தனியான அமைச்சு செயற்படுகின்றது. கல்வி மேம்பாட்டுக்காக காலத்துக்குக் காலம் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. இதற்கென வரவூ செலவூத் திட்டத்தில் பல கோடி ரூபா நிதி ஒதுக்கப்படுகின்றது. ஆசிரியர் நியமனம்இ ஆசிரியர் தொழில் விருத்திஇ பாடநூல்இ சீருடை என்பவற்றின் இலவச விநியோகம்இ பாடசாலைகளுக்கான பௌதீக வளங்களை வழங்குதல் என கல்வி மேம்பாட்டுக்காக அமைச்சு நிதி ஒதுக்கும் துறைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையூம் கல்வியின் மேம்பாட்டுக்காவே மேற்கொள்ளப்படுகின்றன என்றால் அதனை மறுப்பதற்கில்லை.
நாட்டுப் பிரஜைகளின் கல்வி மேம்பாட்டுக்காக மேற்குறிப்பிட்ட அத்தனை நடவடிக்கைகளும் நடைபெற்றபோதும் வகுப்பறைக் கற்பித்தல் வினைத்திறன் மிக்கதாக இல்லையெனின் அதனை என்னவென்று கூறுவது !
அழகான முறையில் கடிதமொன்றை எழுதிஇ உரிய முறையில் அதனைக் கவரையிலிட்டுஇ அதற்கு முத்திரையூம் ஒட்டி பின்னர் அது உரியவரைப் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்துடன் தபாலிடாமல் பொடுபோக்காக இருந்து விடும் ஒருவரின் நடவடிக்கையை என்னவென்று சொல்வது!
கல்வி மேம்பாட்டிற்கான அனைத்து நடவடிக்கைகளும் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுஇ வகுப்பறைக் கற்பித்தல் வினைத்திறனுள்ள முறையில் நடைபெறாதிருந்தால் அது எவ்வளவூ கைசேதத்துக்குரிய விடயம் ! பாரிய பல திட்டங்களையெல்லாம் பல கோடி ரூபா செலவூ செய்து வகுத்துஇ அவற்றைப் படிமுறை படிமுறையாகச் செயற்படுத்தியூம் வந்துஇ இறுதியில் அவற்றின் இலக்கை அடையச் செய்யூம் வழியில் கைநழுவி விடுவதை அனுமதிக்க முடியூமா ! இந்தச் செயற்பாடு கடிதத்தைத் தபாலிடாதவனுடைய செயற்பாட்டைப் போன்றதல்லவா !
எனவேஇ நாட்டின் தேசிய கல்விக் கொள்கையின் வெற்றிக்கு வகுப்பறைக் கற்பித்தலை வினைத்திறன் மிக்கதாக அமைத்துக்கொள்வது மிகவூம் இன்றியமையாததொன்றல்லவா!

லேக் ஹவூஸ் தினகரன் தமிழ் பத்திரிகையில் இரு கட்டங்களாக வெளியான கட்டுரை.

No comments: