Tuesday, June 7, 2011

தொலைந்து போகும் எண்ணங்கள்


எனத கவிதைத் தொகுப்பிற்கு தொநைது போகும் எண்ணங்கள் என பெயரிட்டமைக்கான காரணம்


1980-2008 வரையான காலப் பகுதிகள் மிகவும் மோசமான முறையில் கிளாச்சி காரர்களால் நடத்தப்பட்டமையேயாகும்.இனப்பிரச்சினை ஒரு புரம் இருக்க தீவிரவாதம்
மிக மும்முரமாக தலைதூக்கத் தொடங்கிய கால கட்டங்களில் என்னால் காதலிக்க முடிந்ததே தவிர காதல் பற்றி கவி பாட கொஞ்சம் எனக்கு விருப்பம் வரவில்லை.இன தோசங்களைக்; கடந்து அதற்கு அப்பால் கவிபாட கற்பனை வளாந்தது.எனவேதான் மனம் போன போக்கில் போகாமல் இன வெறியர்களுக்கு எதிராகவும் அப்பாவி மக்களின் அவலங்கள் தொடர்பாகவும் அக்கால கட்டங்களில் பாட ஆரம்பித்தேன்.


பொது மக்கள் செல்லும் இடங்கள் பேருந்து புகைவண்டி என பல்வேறு இடங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்;டன பொது மக்கள் இன்னலுற்றனர்.


அவாகளது ஆசைகள் முறியடிக்கப்பட்டு உறவுகள் விரிசலாக்கப்பட்ட நிலையில் இருந்த போது அவாகளது நிறைவேறாத எண்ணங்களைக் கருத்திற் கொண்டு அவை சீர் செய்யப்பட வேண்டும் என்ற கருத்துப்பட 'தொலைந்து போகும் எண்ணங்கள்' என்று தலைப்பிட்டு எனது கவிதை நூலை பெரும் சீர் கவிஞர்கள முன்னிலையில் சிறியதோர் வண்டு நான் வெளியிட துணிந்தேன்.

No comments: