யாப்பு என்பதற்குப் புலவர்களால் செய்யப்பெறும் செய்யுள் என்பது பொருள். செய்யுள் இயற்றுதற்குரிய இலக்கணம் யாப்பிலக்கணமாகும்.யாப்பு, பாட்டு, தூக்கு, தொடர்பு, செய்யுள் இவை யாவும் ஒரு பொருள் குறித்த பல சொற்களாகும்.
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா" -நல்வழி ஔவையார்-
யாப்பின் உறுப்புகள்
யாப்பு வேறு, செய்யுள் வேறு; அசைகளால் யாக்கப்படுவதால் அது யாப்பு யாப்பின் உறுப்புகள் ஆறு. அவை- எழுத்து
- அசை
- சீர்
- தளை
- அடி
- தொடை
யாப்பின் அடிப்படையில் பா வகைகள்
- வெண்பா
- ஆசிரியப்பா
- கலிப்பா
- வஞ்சிப்பா
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா" -நல்வழி ஔவையார்-
No comments:
Post a Comment