Sunday, December 25, 2011

உனக்காக


உன்னையே என் மனம் எதிர் பார்க்கிறது 
சில நேரம் உன் வராமை கண்டு அது செத்துப்போகிறது
தவிக்கும் என் மனம் பறக்கிறது 
பறந்த என் மனம் நூலறுந்து தெரிக்கிறது 
என்னுடல் செத்துப் பிழைக்கிறது
வேவும் என் கண்கள் திடுக்கிட்டுப் நோக்கும்
நீ வருவதாக உணரும் 
ஆனால்
சில நிமிளங்களில் உணர்வு தளர்ந்து 
அயர்ந்து போகும்
நான் உன்னைக் காண வேண்டும்
உன்னோடு சில வார்த்தைகள் பகிர வேண்டும்
சில்மிசங்கள் கொஞ்சம்
பல்வேறு கற்பனை என்றாலும்
எல்லாமே மாயக்கனவுகளின் மாற்றங்களாகவே பரிணமிக்கிறது.
என் செய்வேன் நான்
காதல் ஏழை.
ஒருத்தனின் பிச்சைத் தட்டுக்கள் கூறும் சரித்திரங்கள் போல்
என் வாழ்வியலும் 
சொல்ல வார்த்தைகள் அற்றுத் துடிக்கிறது
வசனம் கவிழ்கிறது
வானம் தலை கீழாய் விழுகிறது
உன்னைக் கானவே என் மறு ஜென்ம வாழ்க்கை கூட
களத்தில் காத்துக் கிடக்கிறது 

No comments: