கணனி யுகத்தில் ஏன் கண்விடுக்கா நிலை
கல்வி எனறால் என்ன? கலிவியின் மகிமை என்ன? கல்வி எவ்வாறு மானிடரைச் சென்றடைகிறது? அதனை எப்படி பிரயோசனப் படுத்தலாம் என்பதிலே எல்லாம் இன்று மக்கள் விளிப்புணர்வு பெற்ற நிலையில் இருந்தாலும் கூட அந்தக் கல்வியினை மாணவர்களுக்குச் சரியான முறையில் எவ்வாறு சென்றடையச் செய்வது என்பதிலே பலர் கவனயீனமாக உள்ளனர்.
கிண்ணியாப் பிரதேசத்தைப் பொறுத்தளவில் பல்வேறு குழுக்களாக மக்கள் தொகுதியினரைத் தொகுத்து நோக்கலாம் அதில் முதற் தரத்தினர் வசதி படைத்தோர். இந்த வசதி படைத்தோர் என்பது வெறுமனே பணத்தில் மட்டுமல்ல கல்வியிலும் கூட.இவர்களுடைய அன்றாட வாழ்வியலை நாம் நோக்குவோமானால் அனைவரதும் கருத்துக் கணிப்பீடுகளின் படி இங்கு வளர்கின்ற பிள்ளைகள் கல்வியில் கெட்டித்தனம் கொண்டவரகளாகவும் அதே வேளையில் ஒழுக்கம் என்பது அதன் அரைப்பகுதியாகவே உள்ளது என்பதை உணரலாம் காரணம் சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கான அனைத்து வளங்களையும் பெற்றோர் வீடுகளில் சேகரித்து வைக்கின்றனர்.கணனி-தொலைக்காட்சி-தொலைபேசி என்பனவே பாரிய செல்வாக்குச் செலுத்துகிறது.
இடையே பெற்றோர்கள் நினைக்கிறார்கள் எனது பிள்ளை எதிர் காலத்தில் அடைய வேண்டிய நிலையை நாம் உருவாக்கிவிட்டோம் இனிமேல் ஒரு வைத்தியராகவோ பொறியியலாளராகவோ எனது பிள்ளை வரக்கூடும் என்ற நிலையில் அதன் பிற்பாடு அவர்கள் பராமுகமாக உள்ளனர்.
ஆனால் அங்கு நடைபெறுவது எதுவென்றால் முன்னொரு காலத்தில் மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து பல வீடுகளில் குர்ஆன் ஓதப்படுவதனையும் அதற்கு மாறாக இப்போது டீவி நாடகங்ளில் யாவரதும் சல சலப்பினையும் அதிலும் புது விடயம் என்னவென்றால் கணனி ;கையடக்கத் தொலைபேசி போனறவற்றில் பேஸ்புக் எனும் வலைத்தளத்தின் செல்வாக்கும் மிகவும் ஓங்கிக் காணப்படுவது மிகவும் கவலைக்குரிய விடயமே.இதனை முதலில் யாரும் உணர்வதாக இல்லை.இது தொடர்பாக பலவேறு கருத்துக் கணிப்பீட்டாளர்களும் மிகவம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே ஒரு மாணவன் தான் படிப்பு தொடர்பான வியங்களைத் தேடுவதாக பெற்றோர்களிடம் கூறி அவர்களை ஏமாற்றி சின்னத் திரையில் அல்லது கணனியில் தமக்குத் தேவையற்ற விடயங்களில் நாட்டம் கொளவதானது இன்று சாதாரணமான ஒரு விடயமாகவே மாறி வருவதனை யாரும் கண்டு கொள்வதாக இல்லை.எனவே இன்றைய பெற்றோர்கள் மாணவர்களின் கல்வியின் பால் உன்னிப்பாக கூடிய கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
நவீன கல்வி பெருமளவில் இன்று முனைப்புப் பெற்றுள்ளதால் நவீனம் தொடர்பாக முக்கியமாக இணையம் தொடர்பாக பெற்றோர்களும் இந்தக் காலகட்டத்தில் ஓரளவேனும் தெரிந்திருப்பது அவசியமான ஒன்றாகும்.
எனவே சரியான முறையில் தெளிவாகவும் துல்லியமாகவும் ஒரு மாணவனுக்கு கல்வி சென்றடைய வேண்டுமானால் அதற்கான சரியான் வெள்ளைப்பிரம்பு பெற்றோர்களே என்பதில் எவிவித ஐயமும் கிடையாது.
ஒட்டுமொத்தமாக சொல்லப்போனால் இணையத்தளம் இன்றைய வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக உருவெடுத்துள்ளது.இதிலிருந்து மாணவர்களைப் பிரித்தெடுப்பது என்பதை விட இதனூடாக பல்வேறு சிறப்பம்சங்களை நாம் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளதால் கணனிமயக் கல்வியினை மாணவர்களுக்கு அளித்து அதிலிருந்து மாணவச் செல்வங்களை வளம் பெறச் செய்ய பெற்றோர்கள் ஊன்று கோலாக அமைய வேண்டும்.
ஆசிரியர்களையும் தாணடி ஒரு மாணவனின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பானது மிகப்பெரியதொரு திருப்புமுனையைத் தரவல்லது.ஆகவே நவீன கல்விமயமாக்கல் திட்டத்தின் கீழ் பல்வேறு பாடசாலைகளில் இன்று ஒன்லைன் மூலம் கல்வி புகட்டப்படுவது சிறப்பளிக்கிறது .இக்கல்வித்திட்டத்தின் மூலம் மாணவர்கள் மிக விரைவாகவும் தெளிவாகவும் விளக்கம் பெறக்கூடிய வகையிலும் அமைந்திருப்பதால் மாணவர்கள் இலகுவான முறையில் தரம் 5ற்கான புலமைப்பரசில் பரீட்சையில் சித்தியெய்வதோடு பல்கலைக் கழகங்கள் செல்வதிலும் மாணவர்களுக்கு இக்கல்வி விளிப்புணர்வை அளித்துள்ளது எனலாம்.
ஒரு ஆசிரியரின் வழிகாட்டலானது அம்மாணவனை பல்வேறு கோணங்களில் தூணடச்செய்வதனால் இதற்கான வழிவகைகளைப் பெற்றோர் செய்து கொடுத்தல் வேண்டும்.அந்த வகையில் கொழும்பு போன்ற பெரிய நபர்ப்புற பாடசாலைகள் எல்லாம் இணையக் கல்வி மூலம் கல்வியின் சிகரத்தை எட்டிப்பிடித்துள்ளது என்றால் மிகையாகாது.உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம் வளர்ந்த பாடசாலைகளில் மாணவர்கள் ஒப்படை ஒன்றினைச் செய்து கொள்ள தேவையான விடயங்களை கணனியில் தேடியெடுத்து யாருடைய துணையுமின்றி நவீன ஊடகங்களின் துணையுடன் ஆசிரியரின் வழிகாட்டலின் போரில் பாட விடயங்களை முன்வைப்பதனை நாம் காணலாம்.
அந்த வகையில் எமது பிரதேசமும் சளைத்ததல்ல.எமது எதிர் காலத்தின் நவீன கல்விக்கான அடித்தளங்கள் இப்போது கிண்ணியா மத்திய கல்லூரி அடங்கலாக இன்னும் சில பாடசாலைகளிலும் நவீன கல்வியின் தேவையுணர்ந்து பல்வேறு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.பேரளவிலான வெற்றிகளை நாம்தான் இக்கல்வி மூலம் அடையவிருக்கின்றோம்.
ஆகவே வசதி படைத்தோர்கள், கல்விமான்கள், அரசியல் தலைவரகள், நலன் விரும்பிகள் என எல்லோரும் உணர்ந்து
கல்வியில் யாவரும் சமமே
யாவருக்கும் கல்வியே
என்ற வகையில் யாவரும் கல்வியில் வளம் பெற்று வழி பெற வழி சமைப்போம்...........
No comments:
Post a Comment