Saturday, January 19, 2013

ஹஜ்ஜூப் பெருநாள்(சிறுவர் பாடல்)


ஹஜ்ஜூப் பெருநாள்(சிறுவர் பாடல்)


பெரு நாள் இன்று வந்தது
பெயரைச் சொல்லித் தந்தது
ஹஜ்ஜூப் பெருநாள் என்றதால்
நபிகள் ஞாபகம் தந்தது

நபி இபுறாகிம் இஸ்மாயில்
நாமங்களைச் சொன்னது
நாமும் நாளும் பயின்றிட
வரலாற்றினைக் கொண்டது.

ஹஜ்ஜூ என்ற நாமத்திலே
ஆழ்ந்த கருத்து ஒன்று உள்ளதென்று
சொன்ன இறை சொல்லினிலே
உண்டானது குர்பானியே

பட்டாசை விட்டு விட்டு
பாப்பா நீ ஓடோடி வா
பாவங்களை அழித்து விட
புண்ணியங்கள் நிறைj;;து விட

புனிதமான ஹஜ்ஜினிலே
புன்னகையோடு பசியினை ருசியாக
புசித்திட உறவினர்  ஏழை எளியோர்க்கு
குர்பானை கொடுத்திடுவோம் கொண்டாடி மகிழ்ந்திடுவோம்.

No comments: