அழகான பூவுக்கும் அருமையான காளைக்கும் பிறந்த
அற்புத சிங்கம் ஒன்று குமுறிய வருத்தப்படும் வார்த்தைகள் இவை
குடும்ப அங்கத்துவம் ஐந்து என்றாலும் அதில் உள்ள தங்கத் தத்துவம் ஒன்றுதான்
அது இங்கு மகிமை பெறுகிறது கதையில் முதுமை பெறுகிறது
அரவனைக்க அக்காக்கள் இரண்டு அன்புக்கு தம்பிகள் இரண்டு
தப்புகள் எப்போதும் அப்பப்போது வந்து போகும் சண்டைகள் போட்டாலும்
அவை சந்தோசத்தில் ஊற்றெடுதது; தேனாறாக மாறி கடல் சென்றடையும் ஒற்றுமையாக
துக்கங்களும் தூக்கங்களும் வாழ்க்கையின் மாதிரிகள் போல் நிஜத்தில் உலாவும்
துள்ளிக் குதிக்கும் சந்தோசங்கள் சில வேளை பள்ளத்தில் கால் வைக்கும்
பள்ளங்கள் ஆழமென்றால் அழுகழுகை நெடுகத் தொடரும்
அழுகை தான் எங்கள் ஆடம்பரம் அத்தியாவசியம் எல்லாமே
அழுகையை பணம் கொடுத்து வாங்கத் தேவையில்லை என்பதனால்
என்னதான் கவலை என்னதான் துக்கம் என்பார்
கேட்பதற்கு ஆளிருக்கும் தோள் கொடுக்க யார் வருவார்-யாரும் வரார்
மின்னி மின்னி ஜொலித்திடும் இரவு வெளிச்சத்தில்
கிராமங்கள் தோறும் நகரப் பூஞ்சோலைகளாக காட்சி தரும் அழகுக்க அடித்தளம் இடும்
வெளிச்சங்கள் ஜொலிப்பது போல் மனிதர்கள் இடையிடையே ஜொலிப்பர்
வெளிச்சமே இன்றி வெளிர்ந்து போகும் மனங்கள் உண்டு என்பதை உணர்வார் யாருமில்லை
வெளிச்சத்தில் விளையாட மனம் எத்தனிக்கும் எம்மிடம் அப்படி இல்லையென்று அது த்தளிக்கும்
மனக் கனவில் கற்பனைகள் போடும் வறுமையை நினைத்து வட்;டத்திற்குள் அடங்கிவிடும்
மொட்டு விடும் எத்தனையோ ஆசைகள் எம்மைச் சுற்றி வட்டமிடும் பின் அது தானாகவே
மனச்சிறைக்குள் அடங்கிவிடும் மருந்துகளின்றி தாமாக துயில் கொள்ளும்
அலை போல் விiளையாடும் குழந்தைகள் வாசணை எம்மை ஈர்க்கும்
என்றாலும் பணக்கார வர்க்கத்தின் துர்நாற்றம் துறத்திவிடும் மனசு கொஞ்சம் களைத்து விடும்
நெஞ்சம் எப்போதும் மன்றாடும் இறைவனிடம் தஞ்சம் கேட்கும்
'பஞ்சமில்லாமல் எம்மைப் பாரினில் காத்தருளும்' என்று பதிலின்றி திரும்புகையில்
பைத்தியமே ஊசலாடும் பணக்கார வர்க்கம் ஊஞ்சலாடும் இடைநடுவில் நான்
பக்கத்தில் பந்தங்கள் சொந்கங்களின்றி சோகங்கள் சூழ
வர்ணமயமான கட்டடங்கள் சூழ்ந்து காணப்படும் அவை என்னைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தூக்கிலிடும்
கிராமத்தின் ஒரு ஓரத்தில் குப்பி லாம்பில் ஒரு குடிசை தெரிந்தும் தெரியாததுமாய்
இவ்விரண்டு குழந்தைகள் பக்குவமாய் தாயொன்று பவ்வியமாய்
தந்தையை எதிர்பார்க்கும் ஆவலுடன் கொஞ்சமுமாய் சிறிதொரு குடும்பம் அங்கு நானுட்பட
ஓய்ந்திருக்காமல் ஓடி விளையாடும் பிள்ளைகள் அல்ல ஓய்வாகவே
தாயில் தங்கியிருக்கும் வெளவவால்கள் போல் ஆனது சங்கதியும் அதில் என் கதியும்
தகப்பன் வராமைக்கான ஏக்கம் பசி கொள்ளும் வயிற்றோடு பிள்ளைகள்
பாலில்லா முளையோடு அருமைத் தாய்
குளிக்கத் தண்ணீர் இருக்கும் குடிக்க கொஞ்சம் இளைக்கும்
குடிக்கத் தேநீர் கொஞ்சம் கேட்டால் வாப்பா வந்ததும் தாரன் எனும் தாய்
பசி வயிற்றைக் கிள்ளும் களவு செய்ய தூண்டிவிடும்
வளர்ப்பின் கௌரவம் என்னைக் காப்பாற்றும் வளர்த்ததை நினைத்து இறைக்கு அடிபணியும்
ஹராம் கலக்காத எங்கள் உடல் தந்தையின் உழைப்பில் மட்டும் ஹலாலானது
ஆதலால் தேவையில்லா பண்டங்கள் வீட்டினில் கிடையாது
குடிசையில் உள்ள மூன்றே மூன்று பாத்திரங்களை கண்கள் தேடும்
பாத்திரங்களில் எதுவுமின்றி ஏமாந்து உள்ளம் திரும்பும்
உம்மா பானையில் ஒரு சிரங்கு அரிசியுண்டா என வாய்கள் வினவும்
பாவம் தாய் என்ன செய்யும் கொஞ்சம் பொறுங்க ராசா என்று தலையைத் தடாவும்
நித்திரை கொஞ்சம் கொஞ்சமாய் ஆட்கொள்ளும் கொட்டாவி வந்து வந்தே எம்மைக் கொல்லும்
மேக மூட்டங்கள் வானில் கருப்பாக காட்சியளிக்கும் அது எம் குடிசை ஓட்டையினால் தெட்டத்தெளிவாகத் தெரியும்
இருள் சூழ்ந்த வானில் இருந்து இருமாப்புக் கொண்டு தூரல்கள் இறங்கத் தொடங்கியது
கொஞ்சம் கொஞ்சமாய் மழைகளாயின குடிசையினுள் தூத்தல் வெள்ளமாக மாறியது
தந்தை இன்னும் இல்லை தவிப்புகள மட்டும் மிச்சம் தாங்க முடியாத பசியைக் காணவில்லை
படுக்கைக்கு அறை இல்லை படுக்கவும் இடமில்லை தாய் தோளில் எத்தனைக்கு தூங்கலாம்
தண்ணீரை இரைக்கும் தாய் கண்ணீரை இரைக்கும் கண்களோடு
மழைத் தூரல் சிறிது நேரத்தில் நின்றாலும்
கண்ணீர் தூரல்கள் நிற்க என்னதான் சாத்தியம்
மேக மூட்டங்கள் களைந்து சென்றாலும் பசி மூட்டங்கள் மீண்டும் கூடலாயிற்று
தண்ணீரை இரைத்த தாய் தலையணைகள் அகற்றிவிட்டு கிழிந்த துணிகள் சாக்குகளை கீழே போட்டு
அதன் மேல் பாய் போட்டு பாயின் மேல் போர்வையிட்டு போர்வை மேல் எம்மைப்போட்டு
தாலாட்டுப் பாடும் தாய் முகம் பார்க்கும் போது வரும் ஒரு ஆவேசம்
கண்ணீர் மட்டும் அதன் அணையில் முட்டிக் கொள்ளும் அழுது கொண்டால் குழந்தை ஒன்று எழுந்து விடும்
பயத்தில் தூக்கம் பசியில் ஏக்கம் வாழ்க்கையில் மூர்க்கம்
(தொடரும்)
No comments:
Post a Comment