Thursday, May 16, 2013

வறுமைப்புயல் வாட்டிய தடயங்கள் (பாகம்-02) {{{இமாம்}}}


****************************************************************************@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@*****************************************************************************
பாயை விட்டு எழுந்து கொண்ட என் உணர்வுகளும் உடலும்
முதுகு கடித்தால் உரசிக் கொள்ள சுவரில்லாமல் தவிதவித்தது
மனம் பரிதவித்தது
பாவம் காலைக்கடன் முடிக்க நேரமிருக்காது வாங்கிய
கடன் கொடுப்பதை நினைத்து
காலை எழுந்தவுடன் விளையாட்டு பாரதிக்கு:-
கடவுளுக்கு எங்கள் மீது விளையாட்டு

காலை நேரம் கால்கள் எல்லாம் நடுக்கம் கொடுக்கும் தாயவளின் கண்முன்னே.
எங்கள் பசிக்கொடுமை தாங்க முடியாதவள் என் தாய்
அவள் பசி தாங்கிக் கொண்டு
வாயில் தண்ணீரூற்றி பருக வைத்து கஞ்சி மிடரு புசிக்கத் தந்து
தலைமுடி சீவி விடுவாள் என் தாய் என் முகம் பார்த்து முடிகளைக் கோதி விடுவாள்

கந்தையானாலும் கசக்கி கட்டு என்பதற்கு ஒழுகுவாள் என் தாயவள்
பிய்ந்து போன காற்சட்டை மேற்சட்டைகளை பொருத்தமான துணி கொண்டு
பக்குவமாய் தைத்துத் தந்து பள்ளிக்கூடம் அனுப்பும் போது
புத்தகத்தில் தாயவள் முகமே தோனும் படிப்பினில் உயர் பதவி பார்க்கத் தோனும்

அறிவைக் கொஞ்சம் கற்று வர பள்ளிப் பக்கம் சென்று விட்டேன்
பசிக்கொடுமை தாங்கொணாது படிப்பை நானும் விடப் போனேன்
பைத்தியம் என விளக்கிய என் தாய் வந்த என் பள்ளிக்கூடம்
சேர்த்துத் தந்தாள் நண்பர் கூட்டம் அதன் பின்னே எனக்கு களியாட்டம்

நண்பர் கூட்டம் சேர்ந்து வந்து எனக்கு சோறூட்டும்
தாய் நினைவு வந்து என்னைத் தாலாட்டும்
பசியின்றேல் பாடம் படிக்க துணிவு வரும் அது வந்தால்
பாவம் எமக்கு எதுதான் வரும்
நண்பர் கூட்டம் சில வேளை எம் நிலையை குத்திக்காட்டும்
அந்த வளியில் கொஞ்சம் வாழ்க்கை வெறுக்கும்
பாதியில் மனம் கோணும்
மீதியை உள்ளம் அழுதே தீர்க்கும்

பள்ளி விட்டு பாதை நடக்கையில் கற்பனைகள் எல்லாம் கலந்தே வரும்
வீட்டு ஞாபகங்கள் வலியை வளர்க்கும் வார்த்தைகள் தடம் மாறும்
வாழ்க்கை இடம் புரளும் பள்ளி ஞாபகம் கொஞ்சம் கொஞ்சமாய்
களைந்து செல்லும்
நிறைந்திருக்கும என் வயிற்றை வீட்டுப்பட்டினி காலியாக்கிவிடும்

திடுக்கிடுவேன் தடீரென வீட்டில் வந்து முளித்து விட
அஞ்சிக் கொள்வேன் என் வயிற்றை நிறைத்து விட்டமை உணர்ந்து
என் ஞாபகங்கள் என்னைத் தானாகவே வெட்கப்படுத்தும்
பிள்ளைகளும் பசியோடு தாயும் கண்டு என் முதுகு கூணல் போடும்

பந்தங்களை விட்டு விட்டு புசிப்பது தவறென்று உள்ளம் உணர்த்தும்
உணர்த்திய உள்ளமே உணவின்றி நீயும் பசியாகவே இரு என தூண்டும்
பக்கத்து வீடுகள் நடுமதியத்தில் நடுநிசியைப் போல் உறக்கம் கொள்ளும்
கூறுகெட்ட மனிதர்கள் என ஏசத் தோன்றும் வறுமை கண்டு வாய் தானாகவே மூட உணரும்

தாய் தந்தைக்கு தொழில் செய்து வருமானம் ஈட்டிக் கொடுக்க சிந்தனை வரும்
எண்ணங்கள் வரவேற்பை பெறும் வயசு ஏமாந்து போகும்
சட்டங்கள் கண்ணைக் குத்தும்
தரித்திரியங்கள் எம்மை ஓட்டும்

பெரியவனானால் வெளி நாடு செல்லலாமே என உள்ளம் உணரும்
உள் நாட்டில் ஒரு வேளை தின்ன முடியவில்லையே என தானாக அது கதறும்
எம் போன்ற ஏழைகளுக்கு எம் உள்ளம் உணர்வோடு இறையிடம் பிரார்த்திக்கும்
எமக்கு எவரும் உண்டோ என உள்ளம் இன்னும் கொஞ்சம் குறுகுறுக்கும்

பசி என்னும் பாடம் பள்ளியில் போதிக்கப்படாதா என கேள்விகள் எழும்
பஞ்சம் போக்க பட்டினி ஒடுக்க ஒருத்தன் இல்லையோ என உள்ளம் கதறிக் கொள்ளும்
ஓரிரு மாதம் அந்தப் பசி தாங்க மாத்திரைகள் கேட்கும்
அதற்கும் வசதியான கூட்டம் தேவையென்றே அது தோற்றுப்போகும்

மறுநாள் விடிவினை வேண்டாம் என மனம் ஆர்ப்பரிக்கும்
விடியல் அதையும் தாண்டி வந்துவிட்டால் எல்லாமே வெறுத்துப் போகும்
பாடசாலை பக்கமே தலை காட்ட எண்ணம் நினையாது
பள்ளிப்பாடம் கொஞ்சம் கூட உள்ளம் நிற்காது.

பஞ்சம் நீக்க நினைக்காத பணக்கார பாவிகளை கொஞ்சம் பார்க்கத் தோன்றும்
ஏழ்மையின் மகிமை பற்றி விரிவாய் பேசச் சொல்லும்
எமக்கு முன் அவர் நிற்பாரே எனக் கேட்டு உள்ளம் நொந்து போகும்
கஸ்டங்கள் புரியாத மனிதர் கூட்டம் ஒழிக என ஓசை உள்ளடங்கிக் கொள்ளும்

அன்புடன் இமாம்
தொடரும்.......... (பாகம் 3)

No comments: