Friday, January 3, 2014

அந்நியன்


 

அந்நியமாய் இருந்தோம்

அடிக்கடி பேசிக்கொண்டோம்

நட்பெனும் சோலையில் பூத்த

உயிரிலும் மேலான நண்பர்களானோம்

 

பகிர்ந்து கொண்ட கதைகளும்

புரிந்து  கொண்ட உணர்வுகளும்

சின்ன சின்ன கேலிகளும்

உன்னுள் என்னை மேலும் ஈர்த்தது

 

குடும்பத்துடன் குதூகலமாய்  கழித்த பொழுதுகள்

பேசி பேசியே விடிந்து போன இரவுகள்

தோல் சேர்ந்து நடந்து போன  பாதைகள்

என்றுமே என் மனதில் பசுமரத்தாணிகள்

 

உன்மேல் எனக்கிருக்கும் பற்றை எண்ணி

எனக்குள்ளே வியந்து கொண்டேன்

உன்னை போல் ஒருவன் என்னருக்கில்

 என்றுமே  துணை இருக்க  ஆசை கொண்டேன்

 

என் வாழ்வில் சந்தித்த

உத்தம நண்பன்  நீயென எண்ணி இருந்தேன்

உன்னில் எல்லா உரிமையும் எனக்கு இருப்பதாய் எண்ணி

அதிகம் அக்கரை கொண்டேன், கொஞ்சம் கோபப்பட்டேன்

உன் இன்ப துன்பம் எல்லாம் பகிர்ந்து கொள்ள முனைந்தேன் 

 

காரணம் தெரியாத உன் திடீர் மௌனம்

என்னை நிலை குலைய  வைத்தது

என் வார்த்தைகள்  உன்னை காயப்படுத்தியதா

இல்லை உன் உணர்வுகளை நான் கலங்கம் செய்தேனா?

விடை தெரியாத புதிராய்  தத்தளிக்கிறது மனம்

 

உன் மீதிருக்கும்  கரிசனையை தப்பாக புரிந்து கொண்டாயா நண்பா?

யாரிடமும் பணியாத நான் உன்னிடம் அதிகம் பாசம் கொண்டேன்

துணிவான நான் இன்று உன்னை நினைத்து கண்ணீர் வடிக்கிறேன்

என் சோகமெல்லாம் மனதுக்குள்ளே புதைத்து விட்டு

வெளியிலே சிரித்துகொண்டு இருக்கிறேன்.

 

 உன் மௌனம் என்னை அணு அணுவாய் கொல்கிறது

தப்பேதும் செய்திருந்தால் என்னை ஒரு தடவை திட்டிவிடு

எப்போதுமில்லாத தனிமையை இன்று உணர்கிறேன்

பகல் கனவு கண்ட மடமையை எண்ணி என்னையே சபிக்கிறேன்

உன்னை வெறுக்கவோ மறக்கவோ என்னால் முடியவில்லை

பசுமை நினைவுகள் வலிகளாய் மனதில் பதிந்த விட்டது

அந்நியனாய் வந்த நான் மீண்டும் உனக்கு அந்நியனாகி விட்டேன்

ஆனாலும் என்றும் உன் அழைப்புக்காய் காத்திருக்கிறேன் நண்பா!

 

ரிகாஸ்

No comments: