1977 ஜூலை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்ததை அடுத்து, 1972 அரசமைப்புச் சட்டத்தில் இரண்டாவது திருத்தம் 1977 அக்டோபர் 4 இல் கொண்டு வரப்பட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசுத்தலைவர் (சனாதிபதி ஆட்சி) முறை அமுல் படுத்தப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா 1978 பெப்ரவரி 4 இல் அரசுத்தலைவரானார். 1977 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற ஐக்கிய தேசியக் கட்சி மக்களிடம் ஆணை கேட்டிருந்தது. இதன் படி, ஐதேக ஆட்சி அமைத்ததும் புதிய அரசமைப்புச் சட்டம் இயற்ற தெரிவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
No comments:
Post a Comment