Monday, May 20, 2013

விதைத்தவன் சிதைத்தான்.{{இமாம்}}


வடுக்களைச் சுவற்றிலடித்து
வெம்பச் செய்து
கனியென புசிக்கிறது
சுரணையற்ற நா.

காவலுக்கிருத்திய வேலிகளே
களைகளாகி பயிரையே
பங்கமாக்கி
அசிங்கப்படுகிறது.

வேலிக்கட்டைகள்
பனைமட்டைகளெனப் பாராது
பின்னங்கால்களை உயர்த்தி
சிறுநீர் கழிக்கும் நாய்களினை
மிஞ்சுகின்றன உன் காமச்செயல்.

பத்திரிகைகளுக்குத் தலைப்புச் செய்தி
நீ கொடுக்கத் தேவையில்லை
விதைத்த நீயே சிதைத்து
பிஞ்சுகளை வெம்பச் செய்வதில்
என்ன நியாயம்.

விதைகளைப் பதர்களாக்கி
விளை நிலங்களை
தரிசாக்கி தாசியாக்க
முனையும் மூடனை
என்னவெனக் காட்டுவது.

முதலில் வேலிகளைக்
கொளுத்துங்கள்.
பலரின் பார்வையில்
பயிர்கள் பாதுகாக்கப் படலாம்.

நன்றி. ஹனிபா சஹிலா.

No comments: