Monday, May 20, 2013

மாறிப்போன காதல்.


உன்னை மறப்பதற்கு நினைத்து நினைத்தே என்னை கவனிக்க மறந்து விட்டேன்.

சோமாலிய உடம்பாகி போன என்னுடல் காவாலியாய் அலைகிறது வீதியில்.

உனக்கு இப்போது நான் முதலாம் தர மாணவன் வரைந்த கேலிச் சித்திரமாக ஆகிவிட்டேன்.

என்னை நீ மறக்காமலே மனதில் பூட்டி வைத்து நான் உனக்குள் இருக்கும் சந்தோசத்தில் கொளுத்து விட்டாய்.
எனக்கு ஒரே ஒரு சந்தோசம்
பைத்தியகாரனையும் காதலிப்பாள் பணக்காரி என்பதில்.

No comments: