Monday, May 20, 2013

மனிதா நீ மனிதனாய் இரு


சேவைகளைச் செய்து கல்வெட்டுக்களில் பதிப்பதை விட
கல்வெட்டுக்களில் பொறிக்கப்பட வேண்டிய சேவைகளைச் செய்

மேதைகளை இகழ்ந்து மகிழ்வதை விட
பலதும் கற்று அனுபவம் பெற்று மேதையாகப் பார்

கவிஞனை கசந்து (கடிந்து) பாட நினையாதே
மக்களை மகிழ்விக்கும் கவிதைகளைத் தந்துதவு.

ஏழைகளைக் கண்டு மனம் கோணாதே
அவர் வாழ்வை வளமாக்கும் மாத்திரைகளைக் கொடு

மாணவனைப் பார்த்து மடையன் எனாதே
மானசீகமாய் வாழக் கல்

மாடுகளைப் பார்த்து நீ மாடு என சொன்னாலும்
உன்னை மாடென்று சொல்லும் அளவுக்கு நீ நில்லாதே

மனிதா நீ மனிதனாய் இரு
மானம் கெடா புனிதனாய் இரு

No comments: