Monday, May 20, 2013

மூதூர் றிஸானா நபீக்


ஒரு போதும் கலங்காத கடல் நீரை
கண்ணீர் கடலாய் மாற்றி விட்டு
சுவனம் செல்ல நீ முன்னே சென்று விட்டாயம்மா
எங்களை நரகக் குழிக்குள் தள்ளிவிட்டு

உனக்கு நடந்தது ஊமையொன்று கோள் சொன்ன கதை.

எமக்கு நடப்பது செய்தியொன்று கண்ணீரான கதை.

மாறிப் போன உலகில் நாறிப்போன நீதிகளை நினையாது
உன் ஆத்மா சாந்தியடைய இது சமர்ப்பணம்.

No comments: