இறப்பின் அந்த ஓர் நொடி
றிஸானாவின் உயிர்நாடிகளின் வெடிப்பு
உயிர் பிரியும் அந்தத் தருணம்
றிஸானா வாள் முனையில் மரணம்
பூவொன்று சருகான சேதி
பூதவுடலுக்கான இலங்கையின் காத்திருப்பு
தலைவிதி எழுதப்பட்ட ஏமாளியின் கதையானது காத்திருப்பு
கொடூரமற்ற காந்தளான முகம்
றிஸானா எனும் பெயருக்கேற்ற சாந்த குணம்
அடக்கம் பேணும் பெண்மை
அழகு துள்ளும் இளமை
கொண்ட
மென்மையான உன் கழுத்தில்
உனக்கான சர்வதேச எதிரப்புகளையும் தாண்டி
கத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சியான காட்சி கதிகலங்க வைத்ததம்மா...
பீறிட்டு எழுந்த இரத்தங்கள்
எங்களில் படவில்லையே
கவலை கொந்தளிக்கிறது
உனக்காக உலகமே கண்ணீர் வெள்ளம் கொண்டது
உன் வெண்மை உள்ளம் கண்டு
கண்ணீர் வெள்ளத்தால் நிரம்பியது
உனக்கான நன்மைகள்,
தீமைகளின்றி
சரீஆ சட்டத்தின் கீழ் சரிந்த உன் பூவுடல்
பூதவுடல் ஆகவில்லை
இறைவனிடத்தில் பூக்களாய் மலரட்டுமே.
நாதியின்றி நீ மட்டும் நாடு திரும்ப விடாமலே
நாட்கள் பல கழிந்தும் நாலா பக்கம் பார்த்து பார்த்து
தன்னந்தனியே நீ பட்ட துயரும்
தாகத்தில் தவித்திருந்த போது
தாகம் புரியாமல் கண்ணீரே
தண்ணீரான கதையும்
உன் விடுதலை
அவிழ்க்க முடியாத விடுகதையான சங்கதியும்
உன்னால் எப்படித்தான் பொறுக்க முடிந்தது
எமக்கு புதிரானதம்மா...
சிந்திக்க வேண்டிய எம் மரணத்தை விட
சிறப்பாகவே உள்ளதம்மா உன் மரணம்.
நாளை மஹ்ஸர் சந்திப்பில் புரியும்
றிஸானாவின் சுவன வாயில் நுழைவும்
கொடூரகாரர்களுக்கான நரகக் குழி தீண்டலும்
நன்மைகள் மீதம் கொண்ட றிஸானாவே
நாளை யாரும் நன்மைக்காய் இரந்து வந்தால்
புண்ணிய கைகளால் வாரி வழங்கி
பிர்தௌஸ் கிடைக்க எமக்கும் வழி பண்ணுங்கள் சகோதரி.
No comments:
Post a Comment