Monday, May 20, 2013

காதல் கவிஞன்


நான் எழுதும் கவிதைகளால்
கவிஞனாவேனோ தெரியவில்லை.

என்றாலும்
உனக்கு நான் காதலனாகிவிட்டேன்
என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது.

எனது கவிதைக்கான பரிசில்களை
நான் எதிர்பார்க்கவே இல்லை

என் காதலுக்கான சிறு புன்னகையை
என் சாதனையாகவே கருதுவேன்.

No comments: