Monday, May 20, 2013

உன்னிடம்தான் கேட்கின்றேன் பதில் சொல்வாயா?{{இமாம்}}


கற்செதுக்கி சிலை வடிக்கும்
பெண்ணவள் நீயே!

தேன்கனி சொற்கொண்டு கவி வடிக்கும்
பெண்ணவள் நீயே!

சொல்லாக்கம் செய்ய
எழுத்தை தொடுப்பவளே
உன் சொற்களால் உண்டான
கருத்தை ஏன் கசக்கி பிழிகிறாய்?
மனத்தால் ஏன் செத்து ஒழிகிறாய்?

ஆடவரை கவர்ந்திழுக்கும் கார்மோகினியிவள்
என் கற்பை கதைகளால் சூறையாடிய சூறாவளி!
உன் மீது எனக்கொன்றும் இல்லை.
என் மீது எனக்கான வலிகளும் வரிகளும் இவை.

சர்க்கரை சேர்ந்த உன் வார்த்தைகளில்
வசப்பட்டவன் இவன்
சர்க்கரைகள் கசப்பதாக
தகவல் தருகிறாயே ஏன்...??

முத்துக்கள் பெறுமதி கொண்டவை
என உணர்த்திவிட்டு
அவை கற்கள் என இப்போது சொல்லுவது
வேடிக்கை வேடிக்கை.

கலந்துரையாடல்களும் ஆலோசனைகளும்
காதலின் வடிவமல்ல
பூக்களும் காய்களும் ஒரு மரத்தின் கனிகளல்ல.
வித்தியாசங்கள் அறியாத பேதைகள்
இங்கு யாருமில்லை.
அறிந்து கொள்ளும் மேதைகள் இல்லாமலும் இல்லை.

காதல் கொள்ளும் ஐயறிவு பிராணிகளை விட
நாம் மேலா??

அல்லது பிராணிகள் மேலா??

சொல் உன்னிடம் தான் கேட்கிறேன் ...

No comments: