முஸ்லிம்கள் நோற்கும் முப்பது நாள் விரதம்
இறைவனின் அருள் கிடைக்கும் புனித நாட்கள்
ஏழைகளது பசியுணரும் பட்டினி
செல்வந்தர்களின் பெருமை அடக்கும் சிறை
பொய்கள் மறையும் நாட்கள்
உண்மை உதிக்கும் மாதம்
உணர்வுகள் அடக்கப்டும் மாதம்
மாபாவம் ஒடுக்கப்படும் மாதம்
சத்தியம் ஓங்கும் மாதம்
நேர்மை செழிக்கும் மாதம்
ஒற்றுமை பொழிக்கும் மாதம்
சாத்தான் அரசு கவிழும் மாதம்
மனித அடிமை மறையும் மாதம்
வணக்கங்கள் குமியும் நாட்கள்
கொடுமை ஒழியும் நாட்கள்
உதவிகள் கிடைக்கும் நாட்கள்
அல்லல் ஓடும் நாட்கள்
இத்தனை முத்துக்கள்
பொதிந்த இம்மாதம்
ஒரு வருடத்தின் இர்த்தினச் சுருக்கமே.
பாவங்களைச் சுட்டெரிக்கும் ரமழானே வருக
பாவிகளை மாற்றிவிட வருக வருக
ஆயிரம் மாதங்களில் சிறந்த நீ வருக
ஆயிரமாயிரம் நன்மைகளைச் சொரிந்திட வருக.
No comments:
Post a Comment