இனங்காணப்படாத கவிஞர்களில் நானும் ஒருவன்
என் கவிதைகள் பாடல் வரிக ளாய் அழுகிறது
தாலம் போட்டுப் பார்க்கவோ இராகம் மீட்டுப்பாரக்கவோ
யாருமின்றி தவிக்கிறது.யாராவது ஒரு இசையமைப்பாளரின்
மெட்டுக்காக.
பாடல்
பேசப்படாத கவிஞன் நான் வாசப்படாத கவிதைகள் என்னதுதான்
பூஜித்து நான் இருக்கிறேன்
இராக தாளத்தில் பாட யார் வருவார்
நேற்று இன்று என்று இல்லை
நீண்டநாளாய் தூண்டில் போட்டேன்
நித்தம் ஓரு மீனைப் பாரத்தேன்
பட்ட மீன்களிடம் வீணையின்றி தோற்றே போனேன் தோற்றே போனேன்
யார் வருவார் யார் வருவார் என் சோகம் தீர்க்க யார் வருவார்
வைரமுத்து பக்கம் இல்லை
வாலி கூட சத்தம் இல்லை
கவிதைகள் செப்பம் இல்லை என்று கவிஞர்கள் ஒதுக்குவாரோ.
(பேசப்படாத கவிஞன் நான் வாசப்படாத கவிதைகள் என்னதுதான்
பூஜித்து நான் இருக்கிறேன்
இராக தாளத்தில் பாட யார் வருவார்)
காலங்கள் செல்லச் செல்ல
கவிதைகளும் கசத்துவிடும்
கவிதைகள் நல் வசனம் பெற
கவிஞர் நீர் களங்கள் தாரும்
இனி என் கவிதை ஏமாறுமோ
ஒரு காம்பில் உள்ள பூ இடம்மாறுமோ
மனம் வருந்தி நான் பாடுகிறேன்
உச்சி கவிஞர்களைத் தேடுகிறேன்
யார் வருவார் யார் வருவார் கவி தாகம் தீர்க்க யார் வருவார்
போர் புரிவோர் யாருமின்றி என் வரி பாட முன் வருவோர்
என் தாய்க்கும் கூட ஈடாவார்.
(பேசப்படாத கவிஞன் நான் வாசப்படாத கவிதைகள் என்னதுதான்
பூஜித்து நான் இருக்கிறேன்
இராக தாளத்தில் பாட யார் வருவார்)
No comments:
Post a Comment