Monday, May 20, 2013

பாலம் சேர்த்து வைக்கும் காதல்(கிண்ணியா)


பாலம் கடந்து நம்ம போனா
கிண்ணியா வரும் வா புள்ள
அந்தப் பாலத்தால நாம போவக்கல
பாட்டு வரும் வடிவான காத்து வரும் நம் காதலும் சேந்து சிந்து பாடும்
ஒனக்கு விருப்பமுனா என்னோட வா வா
ஒன்னா போனா நானும் என்டகாலும்
ஒங்க வாப்பா பேச்ச கேட்டுக்குட்டு
முடுக்கோரம் ஒதுங்காத
மூளையா என்னோட வா
வசந்தம்னா என்னான்டு புரியும்
பள்ளிக்குடம் ஞாபகமும்
பள்ளாங்குழி விளையாட்டும்
பாவாட ஒசத்திக்குட்டு ஓடுன
ஞாபகமும்
என்னோட வந்தாத்தான் புரியும்
ஓங் அப்பனுக்கு என்னதான் தெரியும்

கடல் காத்து வீசுமடி தேகமெல்லாம் கூசுமடி
மனசெல்லாம் பேசுமடி
ஏம் பொன்னே
என்னோட வந்தாத்தான் அது புரியும்
இல்லாட்டி
உன் வாசம் யாருக்கு புரியும்.

ரோட்டெல்லாம் மக்கள் படையெடுக்கும்
அத பாத்தே நம் வாழ்க்க மலையேறும்
வகை வகையா கடையெல்லாம்
வா வானு அழைக்குமே
அங்குமிங்கும் உன்ன நான் அலங்கரிக்க
மனசுதான் தூண்டுமே

என்னோட நீ வந்தா மனசெல்லாம் குளிரும்
என்ட செல் கேக்காம நீ போனா
ஒடம்பெல்லாம் கருகும்
ஓம் வாழ்க்க இத்தோட இருகும்

பாதையால போறது கஸ்டம்னு
பாலம் ஒன்னு போட்டானே
நம் காதல் கடக்கமுனு
இனியும் நீ சுணங்கினா
சுனாமி கூட தாங்காது
ஓடி வா போவோம் நன் நாளுல
இல்லேனா போவோம் தண்ணீரிலே

No comments: