Monday, May 20, 2013

கலைப் பஞ்சம் போக்க


*************************************************************
கலை என்பது கருப்பிடித்த கர்ப்பம்
துருப்பிடிக்காமல் பாதுகாக்க
நாம் கைகோர்த்து நிற்போம்
*************************************************************
காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்
இலக்கியத்திற்கே முன்னோடி கலை என்பார்

கலையை களை எடுத்து
பக்குவமாய் பாதுகாத்து
வளமூட்டி நீரூற்றி
பயிர்ச் செடியாய்
வளர்த்தெடுத்து

பாலுண்ண தேனருந்த
நடுத் தோட்ட வெருளியாகி
தோட்டத்தை காத்திங்கு கலை விருந்தளிப்போம்

கவியாற்றை ஓட விட்டு
காவிரியாய் விரிந்து நிற்போம்
வருந்துவோருக்கு கலை விருந்தளித்து
இன்னல் போக்குவோம்-கலைக்கு
கன்னல் சேர்த்திங்கு
கவிமதுரம் படைத்து வைப்போம்

வாரீர் வாரீர் கலை வளமாக்க வாரீர்
கலைப் பஞ்சம் போக்க வாரீர்
கவித்தஞ்சம் கிடைக்க வாரீர்.
**********************************************************
உங்கள் இமாம்

No comments: