Monday, May 20, 2013

உன் மீது கோபம் வந்தும் வராததுமாக!! {{இமாம்}}

உன்னை அடிக்க நினைக்கிறேன்
கல்லை எப்படி பூவால் தகர்ப்பது ??

உன்னை வெட்டிக் கொல்ல நினைக்கிறேன்
மலையை எப்படி வாள் கொண்டு வெட்டுவது??

உன்னை சுட்டுத் தொலைக்க நினைக்கிறேன்
ஆனால் என் வேட்டுக்கள் கடலுக்குள் அடங்கி விடுகிறது??

உன்னை எரித்து விட சொல்கிறது என் மனம்
எரிமலையை தீக் குச்சி கொண்டு எரிக்க முடியுமா??

உன் இதயத்தை நசுக்க நினைக்கிறேன்
பழுத்திருக்கும் இரும்புச் சட்டகத்தில் எப்படி கை வைப்பது??

எங்காவது ஒரு மூலையில் தொலைத்து விட நினைக்கிறேன்
வஸ்கொடகாமாவை எங்கேதான் தொலைக்க முடியும்??

ஆனால் ,

நீ.. நீ.. ஏதோ நிலவென்கிறார்களே !!
உன் ஒளியின் தன்மை
இனி இந்த சூரியன் இல்லாவிட்டால் புரியும்..

No comments: