Monday, May 20, 2013

சாகத் துடிக்கறேன்


காதலில் நான் தோற்றுவிட்டு
கடைசியாக
உன் முகம் பார்த்த போது கூட
நான் தோற்றுப் போன வருத்தம்
என்னைத் தாக்கவில்லை
இனி உன்னை பார்க்க மாட்டேனோ
என்ற ஏக்கம் தான் வாட்டியது.
இறுதியாக உன்னிடம் கெஞ்சி உன்னோடு வாழ ஒரு சந்தரப்பம் தானே கேட்டேன்
உன் நிழல் கூட படாத நான்
இறைவனிடம் ஒரு வரம்
உன்னோடு வாழத்தானே கேட்டேன்.
தாய் சொல்வதை கூட கேளாமல்
உன்னோடு வாழ தனியாக நான் புறப்பட்டேனே...
என்னை ஏன் இற்றை வரை அலையவிடுகிறாய்.
உனக்காக நான் வாங்கி வைத்த மோதிரமும்
உனக்கான சுடிதார் புடைவையும் என் கண்ணீர் கடலில் நனைகிறதே...
என்னால் அழ முடிகிறது சத்தம் இல்லாமல்
கண்களில் கண்ணீர் இல்லை
என் கண்கள் கண்ணீரை கடன் வாங்கிக் கூட அழமுடியாமல் தவிக்கிறது
உனக்கான திருமண அழைப்பிதழை என் கண்கள் காணக் கூடாது
உன்னோடு இன்னொருவனை என் கண்கள் காணக் கூடாது
என்னுடன் இன்னொருத்திக்கான இடம் கூட அழிந்து விட்டது
நான் செத்துச் செத்து ஊசலாடுகிறேன்
என் சேதி உனக்கு கிட்டவில்லையா???

No comments: