Monday, May 20, 2013

என் உத்தமியே.


தனிமையில் அமர்கிறேன்
உள்ளுக்குள் அழுகிறேன்
என்னை வருடிச்சென்ற
மாறாத வடுக்களை எண்ணி,

கண்ணீர் சிந்திய விழிகள் வறண்டு போயின
என் எதிர்பார்ப்புகளும் சிதைந்து விட்டன.
வெறுமையான புன்னகையும்
போலியான கரிசணையும்
என் தோழமை ஆயின.

உனக்காய் துடித்த என் இதயம் இன்று மறத்துப் போயிற்று.
சுகமான நினைவுகள் கூட இப்போது வேம்பாய் கசக்கிறது
புதைந்து போன உன் எண்ணங்களுடன் வாழும் நடைப்பிணமானேன்
நீயோ எனக்கு வலிகளை மட்டுமே பரிசாய் தந்த உத்தமியானாய்.

No comments: