Monday, May 20, 2013

வலிகளின் சன்மானம்


உனது இரவு நேர காத்திருப்பு
உன் சந்திப்பிற்காய் நான்

வேலியோரம் உனது தவம்

நீ தான் என் கண்ணில் பட்டாய்

தவிர

என்
காலில் பட்டது வேலிக்கம்பி

கண்ணில் பட்ட நீ
மெதுவாக மறைந்து விட்டாய்
என் இதயவறைக்குள்.

காலில் பட்ட கம்பி தந்த காயங்கள்
ஆறி விட்டாலும்

காதல் தந்த வடுக்கள்
இன்னும் என் வலிகளின் சன்மானமாக.
என்றும் என்னை சந்தோசப் படுத்துவதாக.....

No comments: