ஒடிந்துவிட்ட சிறகுகளோடு நான் பறக்க நினைக்கிறேன்
முறிந்துவிட்ட கால்களோடு நான் ஓட நினைக்கிறேன்.
சென்றுவிட்ட பார்வையோடு பார்க்க நினைக்கிறேன்.
கண்கள் இல்லாமல் கண்ணீர் கொண்டு அழ நினைக்கிறேன் .
கைகள் இருந்தும் விரல்களின்றி உன்னைப் பற்றி எழுத நினைக்கிறேன்.
உன்னை அனைக்க நினைக்கிறேன் தழுவ முடியாமல் தவிக்கிறேன்.
என்னிடம் காதல் வந்தும் வராத நீயின்றி சாவின் பாயில் கிடக்கிறேன்.
No comments:
Post a Comment