Monday, May 20, 2013

உன் குரலால்.....{{{{{{{{{இமாம்}}}}}}}}}}}}


குரல்

விகாரமான குரலில் விருப்பம் இருக்காது
வித்தியாசமான குரல் வியப்பளிக்கும்
விநோதமான குரல் வேடிக்கையளிக்கும்
சில குரல்கள் கேளிக்கையாயிருக்கும்

இனிமையான குரல் காதுக்கு இன்பமூட்டும்
கேண்மைக்கு உவகையளிக்கும்
கேட்க கேட்க கேட்கச் சொல்லும்
கேட்டு முடிய மீண்டும் பேசச் சொல்லும்

முகம் அழகோ அக்ளியோ அது புரியாது
குரல் இனிமையா- தேவதையின் தோற்றம் ஜொலிக்கும்
தேகமெங்கும் தெய்வீகத் தன்மை பெறும்
தெய்வமா நீ என்று உள்ளம் உணரும்

குரல்
காதுக்கு இனிமையும் காதலுக்கு வலிமையும் தரும்
காதலைத் தூண்டிவிடும் ஊடகமாய் மாறும்
காதினில் தூசு தட்டி காதலை வரவேற்கும்
வார்த்தைகள் புரியாவிட்டாலும் கேட்க சுகமாயிருக்கும்

அழகான குரலுக்குச் சொந்தக் காரி நீ
ஒன்றும் சொல்ல வில்லை நீ
உன் குரலே என்னிடம் உன் காதலை சொன்னது
நானும் நீ சொல்லிவிட்டாயோ என்ற பதகளிப்பில்............

(((((((((((தடுமாறிய காதலன்))))))))))))

{{{{{{{{{{{{{{{{அன்புடன் இமாம் }}}}}}}}}}}

No comments: